விருதுநகரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

விருதுநகரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
Updated on
1 min read

விருதுநகரில் ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு நேற்று நடை பெற்றது.

நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், திருவிழா மற்றும் முக்கிய விழாக்களின் போது காவல்துறையினருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு கவுரவ ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு, விருதுநகர் சூலக்கரையில் உள்ள ஆயுதப்படை மைதா னத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் உட்பட 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம், எடை, பார்வைத்திறன் போன்ற விவரங்கள் சரிபார்க்கப்பட்டன.

இதில் தேர்வானோர் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என விருதுநகர் மாவட்டக் காவல் உயர் அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in