

அமெரிக்கன் கல்லூரி சமுதாயக் கல்லூரியின் பி.வாக் உடல்நலம் மற்றும் சுகாதாரத் துறையின் சார்பாக இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நியூ கிரியேசன் டிரஸ்ட் நிறுவனர் குளோரி டெபோரா கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் ம.தவமணி கிறிஸ்டோபர் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். குளோரி டெபோரா பேசும்போது, சுகாதாரமற்ற நிலை காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்டு ஆண்டுக்கு 4.32 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றார். உடல் நலம் மற்றும் சுகாதார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.