

சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா நடந்தது.
விற்பனையை ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார். சிறப்பு விற்பனை வரும் டிசம்பர் 5-ம் தேதி வரை நடக்கிறது.
சிறப்பு விற்பனையில் அடுக்கு தீபம், அஷ்டலட்சுமி விளக்குகள், நாக தீபம், குபேர தீபம் என பல வகை விளக்குகள் விற்பனைக்கு உள்ளன.
இதற்கு 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி உண்டு. விளக்குகள் குறைந்தபட்சம் ரூ.5முதல் ரூ.86,000 வரை விலையில் உள்ளது, என பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் நரேந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.