செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்   சுகாதாரமற்ற கழிப்பறையால் நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற கழிப்பறையால் நோயாளிகள் அவதி

Published on

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மருத்துவமனையின் கழிப்பறைகள் முறையான பராமரிப்பின்றி அசுத்தமாக இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நோயாளிகள் சிலர் கூறியதாவது: கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. இவற்றை தினசரி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வது இல்லை. இந்நிலையில் கழிப்பறையை பயன்படுத்தினால் மேலும் புதிய தொற்று ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் போதுமான எண்ணிக்கையிலும் கழிப்பறை வசதியும் இல்லை. எனவே இம்மருத்துவமனையில் உடனடியாக சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இங்கு வரும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in