

திமுக இளைஞர் அணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச் சாரத்தைத் தொடங்கியுள்ளார். இவ ரை திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தொடர்ந்து நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவர்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது உதயநிதியை போலீஸார் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து விருதுநகர் எம்.ஜி.ஆர். சிலை அருகே திமுக வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் தலை மையில் அக்கட்சியினர் நேற்று சாலை மறியல் செய்தனர்.
இதில் கலந்து கொண்ட திமுக நகரச் செயலாளர் தனபாலன் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜபாளையம் காந்தி சிலை அருகே திமுக நகரச் செயலர் ராமமூர்த்தி தலைமையில் மறியல் செய்தனர். இதில் பங்கேற்ற தென்காசி எம்.பி. தனுஷ்குமார் உட்பட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை
இதில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர் ஜெகதீஷ், தலைவர் சவுந்தர், நிர்வாகிகள் அபினேசன், மருது உட்பட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, சிவகங்கை மாவட் டத்தில் 9 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 365 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், கமுதி, தொண்டி உள்ளிட்ட 15 இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.