திண்டுக்கல் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவுசெய்ய அறிவுறுத்தல்

திண்டுக்கல் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள்  நலவாரியங்களில் பதிவுசெய்ய அறிவுறுத்தல்
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினராகப் பதிவுசெய்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறலாம்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சு.சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் இதுநாள் வரை பதிவு செய்யாதவர்கள், உறுப்பினர்களாகப் பதிவு செய்யலாம். கல்வி உதவித் தொகை, திருமணம், ஓய்வூதியம், மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை மற் றும் விபத்து மரண உதவித் தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயனடையலாம்.

இதுநாள் வரை பதிவு செய்யாத தையல் தொழி லாளர்கள், சலவைத் தொழில் புரிவோர், முடி திருத்துவோர், பொற்கொல்லர், மட்பாண்டம் செய்வோர், வீட்டுவேலை செய்வோர், சுமை தூக்கும் தொழிலாளர் தமிழ்நாடு அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை நல வாரியத்தில் பதிவு செய்யாத அமைப்புசாராத் தொழிலா ளர்கள், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு உடலு ழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.

https://tnuwwb.tn.gov.in அல்லது www.labour.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற லாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in