திமுகவினரை கண்டித்து கரூரில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 25 பேர் கைது

திமுகவினரை கண்டித்து கரூரில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 25 பேர் கைது
Updated on
1 min read

நீட் தேர்வு, சிஏஏ, இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்து திமுக சார்பில் கரூர் திருக்காம்புலியூரில் செய்யப் பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் ‘கோ பேக் மோடி’ என எழுதப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாவட்டத் தலைவர் சிவசாமி அளித்த புகாரின்பேரில் திமுகவினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அந்த விளம்பரத்தில் இருந்த ‘கோ பேக் மோடி’ என்ற வாசகம் அழிக்கப்பட்டது. இந்நிலையில், திருக்காம்புலியூர், வெங்கமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் மீண்டும் நேற்று ‘கோ பேக் மோடி’ என எழுதப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை எழுதிய திமுகவினரைக் கைது செய்யக் கோரியும் வெங்கமேட்டில் நேற்று பாஜக இளைஞரணி மாவட்டத்தலைவர் கணேஷமூர்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதை யடுத்து, 5 பெண்கள் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in