யோகா, இயற்கை மருத்துவ கண்காட்சி

யோகா, இயற்கை மருத்துவ கண்காட்சி
Updated on
1 min read

ராணிப்பேட்டையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘நமது முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை வழி உணவு வகைகளான பச்சை காய்கறிகள், பழச்சாறுகள், முளை கட்டிய பயறு வகைகள், பழ வகைகள், சிறுதானிய உணவுகள் இவற்றை இயற்கை உணவாக உண்டால் நோய் நொடிகள் வராமல் தடுக்க முடியும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், இயற்கை மருத்துவம் தொடர்பான கண்காட்சியில் ஆரோக்கிய உணவு வகைகளின் அரங்கை ஆட்சியர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இளவரசி, இயற்கை மருத்துவர் டாக்டர் சசிரேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in