புதுச்சேரியில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவு புதிதாக 54 பேர் பாதிப்பு

முத்தமிழ் செல்வன்.
முத்தமிழ் செல்வன்.
Updated on
1 min read

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச் சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்றுசெய்தி யாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் 3,468 பேருக்கு பரிசோதனை செய்ததில் 54 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. மேலும் உயிரிழப்பும் இல்லை. உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.66 ஆக குறைந்துள்ளது.

பாதிக்கப்பட்டோரின் மொத்தஎண்ணிக்கை 36,585 ஆக உயர்ந்துள்ளது. 621 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 101 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,355 (96.64 சத வீதம்) ஆக அதிகரித்துள்ளது என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில்

25 பேருக்கு தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பாதிப்பு 14,414 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 10,588 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் பாதிப்பு 23,963 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in