அமித்ஷா வருகை தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் நிர்வாகிகள்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் நிர்வாகிகள்.
Updated on
1 min read

தமிழகத்தில் அமித்ஷா வருகை யின் பலன் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை ஐராவத நல்லூரிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

காங்கிரஸ் - திமுக கூட்டணி பல வெற்றி, தோல்விகளை கண்டுள்ளது. ஒருங்கிணைந்து பணியாற்றும் போது மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்தக் கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் 210 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படும் என பாஜக தலைவர் எல். முருகன் கூறுகிறார். 2015-ல் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் தமிழகம் வந்தார் அமித்ஷா. அப்போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

2016-ல் நடந்த தேர்தலில் நோட்டாவுடன் போட்டியிடும் அள வுக்கே பாஜக வாக்குகளைப் பெற்றது. அமித்ஷா 2019-ல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் தமிழகம் வந்தார் . அப்போது இருந்த ஒரு எம்பியையும் பாஜக இழந்தது. தமிழகத்தில் அமித்ஷா வருகைக்கான பலன் பூஜ்ஜியம்தான் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in