

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.
போகஸ்-2020 தொழில் மற்றும் கல்வியாளர்களின் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கை சென்னை ரெட் கன்சல்டிங் இயக்குநர் சுனிதா சுரேஷ் தொடங்கி வைத்தார்.
முன்னதாக வணிகவியல் துறைத் தலைவர் ரோஸிகாட்வின் வரவேற்றார்.
மதுரையைச் சேர்ந்த பேக்கரி நிறுவனர் விசித்ரா ராஜாசிங், வங்கித் துறை நிபுணர் வினுசா, மா-போய் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் இயக்குநர் ஹேமலதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை மாணவியர் கலந்து கொண்டனர்.