வீர, தீர செயல்கள் புரிந்தவர்கள் அண்ணா பதக்கம்பெற விண்ணப்பிக்க அழைப்பு

வீர, தீர செயல்கள் புரிந்தவர்கள் அண்ணா பதக்கம்பெற விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் வீர, தீர செயல்கள் புரிந்தமைக்கான அண்ணா பதக்கம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாமக்கல் ஆட்சியர் மெகராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வீர, தீர செயல்கள் புரிந்தமைக் கான துணிச்சலுக்கான அண்ணா பதக்கம் குடியரசு தினத்தன்று முதல்வரால் வழங்கப்படுகிறது. அண்ணா பதக்கத்திற்கான விண்ணப்பப் படிவம் www.awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை.

விண்ணப்பத்தில், உயிர், சொத்து போன்றவற்றைக் காப்பாற்றுவதில் துணிச்சலான செயல் செய்ததற்கான விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, தொடர்புடைய ஆவணங்களுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் விரிவான அறிக்கையை இணைத்து, ‘மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல்’ என்ற முகவரிக்கு வரும் 24-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விருது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 7401703492 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in