பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட விழிப்புணர்வு கூட்டம்

பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட விழிப்புணர்வு கூட்டம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் பிரதம மந்திரி குடியிருப்புகள் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பிரதம மந்திரி குடியிருப்புகள் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் ஆவாஸ் திவாஸ் தினம் குறித்த கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணபவா தலைமை வகித்தார். பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் பயிற்சி பெற்ற கொத்தனார்கள் கலந்து கொண்டனர். மேலும், பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த விவரத்தினையும், கொத்தனார்கள் கட்டுமானத் தொழில் நுட்பம் குறித்தும் உரையாற்றினர்.

இதில் பயனாளிகளுக்கு வீட்டுக் கடன் தொடர்பாக வங்கி மேலாளர்கள் அறிவுரை வழங்கினர். மேலும் ஒன்றியப் பொறியாளர், துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலகப் பணி யாளர்கள் கலந்து கொண்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in