திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தை ஆய்வு செய்த அரசு பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். அருகில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர்.
திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தை ஆய்வு செய்த அரசு பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். அருகில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர்.

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஆய்வு கூட்டம் அரசு செயலாளர் பீலா ராஜேஷ் பங்கேற்பு

Published on

வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமை வகித்தார். ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அமீத்குமார், வேலூர் துணை பதிவுத் துறை தலைவர் ஜனார்த்தனம், உதவி பதிவுத் துறை தலைவர் லோக நாதன், மாவட்டப் பதிவாளர்கள் ரகுமூர்த்தி, அகிலா, வாணி, விஜயலட்சுமி, புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல் பாடுகளை அரசு செயலாளர் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகம் மற்றும் திருவண் ணாமலை வட்டாட்சியர் அலு வலகம் அருகே உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர், சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்காக காத்திருந்த மக்களுக்கு இருக்கை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in