

போலீஸார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பரணிக்கும் குண்டு பாபுவுக்கும் நில விற்பனை தொடர்பாக முன் விரோதம் இருந்ததாகவும், இதைத் தொடர்ந்துதான் குண்டு பாபு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மறைமலை நகர் போலீஸார் பரணி, சொறி கார்த்திக், அனீஸ், சரத், ஓட்ட கார்த்திக் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.