

ஒத்தக்கடை அருகிலுள்ள ராஜகம்பீரம் காலனியை சேர்ந்தவர் மது (45). இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 8 பிள்ளைகள். மூத்த மனைவியின் மகன் மணிகண்டன் (25), ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் அடிக்கடி மது அருந்துவதை தந்தை கண்டித்துள்ளார். மகனை குடிபோதை தடுப்பு மறுவாழ்வு மையத்தில் சேர்க்க தந்தை திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் தந்தை, மகனுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, குடிபோதையில் இருந்த மணிகண்டன் தந்தையை கட்டை, கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பினார். ஒத்தக்கடை போலீஸார் மணிகண்டனை தேடி வருகின்றனர்.