

கிராம ஊராட்சி மன்ற தீர்மானத் தின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகளை மூடுவதில் இரு வேறு அமர்வுகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3 நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பெரியபட்டினம் ஊராட்சித்தலைவர் எஸ்.அக் பர்ஜான்பீவி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: பெரியபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட கரிச்சான்குண்டு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்தக் கடை தூர கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் உள்ளது. கடையிலிருந்து 300 மீ. தொலைவில் கோயிலும், நூறு அடி தூரத்தில் விளையாட்டு மைதானமும் உள்ளன. இந்த மைதானத்தில் வைத்து மது அருந்துவோர் பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால் சிறுவர்கள் மைதானத்தைப் பயன்படுத்த முடியவில்லை.
கரிச்சான்குண்டு டாஸ்மாக் கடையால் மொத்த கிராமத்தினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 2017-ல் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை இல்லை. இந்நிலையில் 6.8.2020-ல் நடைபெற்ற ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் கரிச்சான்குண்டு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி யும் நடவடிக்கை இல்லை.
எனவே, ஊராட்சி தீர்மானத்தின் அடிப்படையில் கரிச்சான்குண்டு டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந் தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், ஒரு ஊரில் டாஸ்மாக் கடை வேண்டாம் என ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அந்த ஊரில் டாஸ்மாக் கடையைத் திறக்கக்கூடாது என உயர் நீதி மன்றம் ஏற்கெனவே உத்தர விட் டுள்ளது. அதன் அடிப்படை யில், மதுக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றார்.
பின்னர் நீதிபதிகள், ஊராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையில், இரு அமர் வுகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளன. இதனால் இறுதி முடிவுக்காக, இந்த வழக்கு 3 நீதிபதிகள் அமர் வுக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டனர்.