

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். தற்போது வடவாறு வழியாக விநாடிக்கு 2 ஆயிரம் கன அடிதண்ணீரும், காட்டாறுகள் மூலம்விநாடிக்கு 200 கன அடி தண்ணீரும் ஏரிக்கு வந்து கொண் டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டம் 45 அடியாக உள்ளது. தொடர் மழைப் பொழிவால் ஏரியின் வடிகால் மதகான, விஎன்எஸ்எஸ் மதகு வழியாக விநாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்படுகிறது.