விழுப்புரத்தில் இன்று திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக் கேட்பு

விழுப்புரத்தில் இன்று திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக் கேட்பு
Updated on
1 min read

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக சார்பில் சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்துக் கேட்பு கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்றுகாலை நடைபெறுகிறது.

திமுக பொருளாளரும், திமுக மக்கள வைக்குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ முன்னிலையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் வர்த்த பிரமுகர்கள், பொதுநலச் சங்க நிர்வாகிகள், மாணவர்கள் உள் ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை மனு வாக தயாரித்து தேர்தல் அறிக்கைதயாரிப்புக் குழுவிடம் வழங்கவேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

டி.ஆர்.பாலு தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in