

மாற்றுத் திறனாளிகளின் மாதாந் திர பராமரிப்புத் தொகை யை ரூ.3 ஆயிரமாகவும், கடும் பாதிப்புக்குள்ளான மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிர மாகவும் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய் தனர்.
இதேபோல் ராமேசுவரம், உச் சிப்புளி, தினைக்குளம், கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.