குமாரபாளையத்தில் மழையால் தரைப்பாலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு பாலத்தில் கழிவு நீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி

குமாரபாளையம் அப்பன்மேடு தரைப்பாலத்தின் கீழ் ஏற்பட்டுள்ள அடைப்புகளை எவ்வித பாதுகாப்பு உடையுமின்றி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் அப்பன்மேடு தரைப்பாலத்தின் கீழ் ஏற்பட்டுள்ள அடைப்புகளை எவ்வித பாதுகாப்பு உடையுமின்றி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

குமாரபாளையம் தம்மண்ணன் சாலை அப்பன்மேடு தரைப்பாலத்தின் கீழ் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டது. இதனால், கழிவு நீர் பாலத்தின் மேல் பகுதியில் வெள்ளம்போல் பாய்ந்தோடியதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

குமாரபாளையம் தம்மண்ணன் சாலை அப்பன்மேடு பகுதியில் வாகனப் போக்குவரத்து வசதிக்காக தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பல்வேறு இடங்களில் இருந்து அடித்து வரப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் இப்பாலத்தின் கீழ் பகுதியில் அடைத்துக் கொள்வதும், இதனால் பாலத்தின் கீழ் கழிவு நீர் செல்ல வழியின்றி பாலத்தின் மேல்புறம் செல்வதும் வழக்கமாக உள்ளது.

இச்சமயங்களில் பாலத்தை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மாற்றுப்பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த சில தினங்களாக குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் மழையால் அப்பன்மேடு தரைப்பாலத்தில் மழைநீருடன், கழிவு நீர் கலந்து வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

இந்நிலையில் கழிவு நீருடன் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் வழக்கம்போல் பாலத்தின் கீழ் பகுதியை அடைத்துக் கொண்டது. இதனால், மழைநீருடன் கலந்து வந்து கழிவு நீர் பாலத்தின் மேல் பகுதியில் கரைபுரண்டு ஓடியது. வாகன ஓட்டிகள், பாதசாரிகளால் பாலத்தை கடக்க முடியாத நிலை உருவானது. தகவல் அறிந்து வந்த குமாரபாளையம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கழிவு நீர் கால்வாயில் இறங்கி அடைத்திருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை அகற்றினர்.

பாதுகாப்பின்றி அகற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in