

சேலம், நாமக்கல்லில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்தது.
சேலம் மாவட்டத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளான ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் உள்ளிட்ட இடங்களில் பகல் முழுவதும் தூறலும், இடையிடையே கனமழையும் பெய்தது. மேலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினமும் நேற்றும் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 48.6 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்:
வீரகனூர் மற்றும் கெங்கவல்லியில் தலா 40, தம்மம்பட்டி 30, எடப்பாடி 29.60, ஆத்தூர் 11.60, பெத்தநாயக்கன்பாளையம் 10, சேலம் 10.70, ஓமலூர் 13.40, சங்ககிரி 13.20, காடையாம்பட்டி 8.80, கரியகோவில் 15, ஆனைமடுவு 15, ஏற்காடு 8.80, வாழப்பாடி 5 மிமீ மழை பதிவானது.
தொடர் மழையால், மாவட்டம் முழுவதும் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மழையால் பகலில் குளிர்ந்த காற்றும், இரவில் கடும் குளிரும் என சீதேஷ்ண நிலை நிலவுகிறது.
நாமக்கல்லில் கனமழை
இதன்காரணமாக சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தோடுகிறது. அதேவேளையில் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளிலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர் மழையால் குளர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.,): எருமப்பட்டி 50, குமாரபாளையம் 45, மங்களபுரம் 13, மோகனூர் 9, நாமக்கல் 11, பரமத்தி வேலூர் 10, புதுச்சத்திரம் 41, ராசிபுரம் 19.20, சேந்தமங்கலம் 11.70, திருச்செங்கோடு 29, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 19, கொல்லிமலை 15 மி.மீ., மழை பெய்துள்ளது.
அரூரில் 28 மிமீ மழை