திருச்செந்தூரில் டிஐஜி ஆய்வு

திருச்செந்தூரில் டிஐஜி ஆய்வு
Updated on
1 min read

திருச்செந்தூர் செந்திலாண்ட வர் கோயில் கந்த சஷ்டிதிருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, கோயில் வளாகத் தில் உள்ள காவடி மண்டபத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி ஏஎஸ்பிகள் கோபி, செல்வன், திருச்செந்தூர் உதவி எஸ்பி ஹர்ஷ் சிங், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் டிஎஸ்பி பழனிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் திருச்செந்தூர் கோயில் ஞானராஜன், தாலுகா காவல் நிலையம் முத்துராமன், ஆறுமுகநேரி செல்வி,குலசேகரன்பட்டினம் ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் எஸ்பி செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்வுகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழா நாட்களில் தினமும் 10 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

விடுதிகள், மடங்களில் பக்தர்கள் பேக்கேஜ் முறையில் தங்க அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளோம்.

வரும் 19-ம் தேதி மாலைக்குள் விடுதிகள் மற்றும் மடங்களில் தங்கியுள்ள அனைவரையும் காலி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

20 மற்றும் 21-ம் தேதிகளில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மாவட்டம் முழுவதும் 15 சோதனைச் சாவடிகள், திருச்செந்தூர் நகரில் மட்டும் 7 இடங்களில் போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். விடுதிகள் மற்றும் தனியார் மடங்களின் உரிமையாளர்கள் போலீஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in