

விருதுநகர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று காலை தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்காக ஊழியர் ஒருவர் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு மின் வயரி லும், அந்த அறையில் இருந்த அட்டைப் பெட்டிகளிலும் திடீரெனத் தீப்பற்றியது.
தீ வேகமாகப் பரவி அடுத்த தாக உள்ள மருந்து குடோன் அறைக்கும் பரவியதில் அங்கி ருந்த மருந்து, மாத்திரைகள் தீயில் எரிந்தன. இதுபற்றி தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் எரிந்து சாம்பலாயின. இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.