கார்த்திகை முதல் தேதியில் ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள்

கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய  பக்தர்கள்.
கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாத புரம் ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் தேதியை முன்னிட்டு, ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.

சபரிமலை செல்லும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து விரதம் தொடங்குவர். நேற்று கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்களுக்கு குருவடியார் மோகன் மாலை அணிவித்தார். இதற்காக கோயில் சன்னதி நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு கணபதி ஹோமம்,அஷ்டாபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இருமுடி செலுத்த ஏற்பாடு

எனவே மேற்கண்ட நிபந் தனைகளின்படி சபரிமலை யாத்திரை செல்ல முடியாத பக்தர் களுக்காக ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் பக்தர்கள் சபரிமலையில் செலுத்துவது போல் இருமுடி செலுத்த ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. அர சின் கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த ஆலயத்தில் கடைப்பிடிக்கப்படும் எனத் தெரி வித்தார்.

வத்தலகுண்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in