

ஏரல் வட்டம் குறிப்பன்குளம்ஊராட்சி சின்னமாடன்குடியிருப் பைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100 பேர் ஊராட்சித் தலைவர் சிவந்திக்கனி தலைமையில் 3 வேன்களில் நேற்றுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆட்சியர் கே.செந்தில்ராஜை சந்தித்து அவர்கள் அளித்த மனு விவரம்: ‘சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் சுமார் 500 குடும்பங்கள்வசித்து வருகிறோம். விவசாயம்,கால்நடை வளர்ப்பு மற்றும்பனைத்தொழிலை சார்ந்து வாழ்கிறோம். எங்கள் ஊர் அருகேதனியார் நிறுவனம் சார்பில்கல்குவாரி மற்றும் கிரஷர்அமைக்க இருப்பதாக தெரியவருகிறது. இங்கு கல்குவாரி அமையும்பட்சத்தில் நீலத்தடி நீர் மட்டம் மேலும் பாதிக்கப்படுவதுடன் காற்றுமாசடைந்து சுவாச பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே,இந்த பகுதியில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்கஅனுமதி அளிக்கக்கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.