திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானைக்கு காப்புக் கட்டிய சிவாச்சாரியார்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானைக்கு காப்புக் கட்டிய சிவாச்சாரியார்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

இதையொட்டி சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிவாச்சாரி யார்கள் காப்புக் கட்டினர். தொடர்ந்து உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானைக்கு காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் முருகன், தெய்வானையுடன் கோயில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். தினமும் காலை 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகர் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும். சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானை, உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானை பல்வேறு அலங் காரங்களில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ் வாக நவ.19-ம் தேதி இரவு 7 மணி அளவில் கோவர்த்தனாம் பிகையிடம் சூரனை அழிக்க முருகப்பெருமான் வேல் வாங்கும் வைபவம் நடைபெறும். தொடர்ந்து 20-ம் தேதி முருகப்பெருமான், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும். கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்நிகழ்வுகளில் பக்தர் கள் பங்கேற்க அனுமதி இல்லை.

அழகர்கோவிலில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா காப்புக் கட்டு தலுடன் நேற்று தொடங்கியது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளினார். முன்னதாக, சண்முகருக்கு வண்ண மலர்களால் லட்சார்ச் சனை மற்றும் 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு தீபா ராதனையும் நடந்தன.

சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி கோயிலின் உட்பிரகாரத்தில் நடைபெறும் என்றும். இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி யில்லை என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முரு கப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி கோயில் ‘யூ டியூப்’ தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in