அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கை

திருமங்கலம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
திருமங்கலம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
Updated on
1 min read

ஜெயலலிதா பேரவை சார்பில் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலத்தில் நேற்று நடந்தது. இதில் பேரவைச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் நலத்திட்ட உதவி களை வழங்கிப் பேசியதாவது: 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. எம்ஜிஆரின் சத்துணவுத் திட்டம், ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தைகள் திட்டம், தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களின் வரிசையில் தற்போதைய முதல்வரின் குடிமராமத்து திட் டம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

திமுக ஆட்சியில் ஏதாவது சாதனைகளை மு.க.ஸ்டாலின் சொல்ல முடியுமா? நில அபகரிப்பு, மின்வெட்டு, கச்சத் தீவு தாரை வார்ப்பு, முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினைகளில் துரோகம் செய்த ஆட்சி திமுக. நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகிய மக்கள் விரோதத் திட்டங்களுக்கு திமுக மறைமுக ஆதரவு அளித்து மக்களுக்கு வேதனை தந்த ஆட்சியை செய்தனர்.

முதல்வரின் அயராத உழைப்புக்குப் பரிசாக மக்கள் வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோக வெற்றியைத் தருவர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in