

முன் விசாரணை கைதிகளை நீண்ட நாட்களுக்கு சிறையில் வைத்திருக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மதுரை செல்லூர் காவல் நிலையப் பகுதியில் 5 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதாக ஓட்டல் தொழிலாளி தீபக், ஆட்டோ ஓட்டுநர் நவீன் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்குகளில் ஜாமீன் கேட்டு இருவரும் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் கே.கெவின் கரன் வாதிடுகையில், கரோனா ஊரடங்கால் மனுதாரர்கள் வேலை யில்லாமல் உள்ளனர். அவர்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளால் மனுதாரர்களுக்கு வேலை கிடைக்காத நிலை ஏற் பட்டுள்ளது என்றார்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகை யில், மனுதாரர்கள் 5 மோட்டார் சைக்கிள்களைத் திருடியுள்ளனர். அனைத்து வாகனங்களும் மீட்கப் பட்டன. மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கரோனாவால் உருவான துரதிருஷ்டவசமான சூழல்களால் ஏராளமான இளைஞர்கள் வேலை இழந்து வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவதற்கான சூழ்நிலையைக் கருத்தில் கொள் ளும்போது வேலையின்மை தான் முதலிடம் பெறுகிறது. மனுதாரர்கள் போன்றவர்களை நீண்டநாட்களாக சிறையில் வைத்திருப்பது சம்பந்தப்பட்டவர் களுக்கு மட்டும் தீங்கு விளை விக்காது, சமூகத்துக்கும் தீங்கு ஏற்படுத்தும். நீண்ட நாட்க ளாக சிறையில் இருப்பதால் அவர்களின் மனது மேலும் மோச மடைந்து, அடுத்தடுத்து குற்றங் களைச் செய்யத் தூண்டுகி றது. அசாதாரண சூழல் மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே ஒருவரை நீண்ட நாட் கள் சிறையில் வைத்திருக்க வேண்டும்.
சிறையில் இருப்பதைத் தண்டனையாகவும், தடுப்பாகவும் கருதக்கூடாது. நீதிமன்றங்களும் கைதிகள் நீண்ட நாட்கள் சிறையில் இருக்க அனுமதிக்கக் கூடாது. முன் விசாரணை (ப்ரி-ட்ரயல்) கைதிகளுக்கு ஜாமீன் பெற உரிமை உண்டு. அதே நேரத்தில் சமூகத்துக்கு ஆபத்தானவர்கள் எனக் கருதப்படும் கைதிகளுக்கு ஜாமீன் மறுக்கலாம்.
இந்த வழக்கில் மனுதாரர் களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இருவரும் 2 வாரங்களுக்கு தின மும் காலை 10 முதல் 12, இரவில் 7 முதல் 9 மணி வரை காவல் நிலையத்தில் இருக்க வேண்டும். அதன் பிறகு தினமும் காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.