ஆதரவற்றோர் காப்பகத்தில் குழந்தைகள் தின விழா

ஆதரவற்றோர் காப்பகத்தில் குழந்தைகள் தின விழா
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி புனித அடைக்கல மாதா ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.நிவாசன் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி பேசியபோது, “கல்வி ஒன்றுதான் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். எனவே, நீங்கள் சிறப்பான கல்வியை பெற்று வாழ்க்கையில் பல உயரிய பதவி களை அடைந்து, இந்த காப்ப கத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என குழந் தைகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில், ௯டுதல் காவல் கண்கா ணிப்பாளர் சுந்தரமூர்த்தி, காவல் ஆய் வாளர் சுமதி, உதவி ஆய் வாளர் அமரஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in