விக்கிரமசிங்கபுரத்தில் இன்று புத்தக கண்காட்சி தொடக்கம்

விக்கிரமசிங்கபுரத்தில் இன்று புத்தக கண்காட்சி தொடக்கம்
Updated on
1 min read

விக்கிரமசிங்கபுரம் மேலரத வீதியிலுள்ள நகராட்சி கலையர ங்கத்தில் புத்தக கண்காட்சி இன்று தொடங்கி, வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சி நடைபெறும். திருநெல்வேலி நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சியை பொதிகை வாசகர் வட்டம், விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகம், அரிமா சங்கம், பல்சமய கூட்டமைப்பு, அமரகவி பாரதி விழா குழு, அம்பாசமுத்திரம் வெற்றி ஐஏஎஸ் அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. அனைத்து புத்தகங்களுக்கும் சிறப்பு தள்ளுபடியாக 10 சதவீதம் வழங்கப்படும் என்றும், ஆயிரம் ரூபாய்க்கு மேல் நூல்களை வாங்குபவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in