தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல்

தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல்
Updated on
1 min read

தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நேரத்தில் அரசு அலுவலகங்களில் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ரகசிய தகவலின்பேரில் திருப்பூர் - பல்லடம் சாலையிலுள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை காவல் துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி, ஆய்வாளர் கவுசல்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 39,500 பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறும்போது, "பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் தர்மேந்திரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in