

தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் ந.ஜெ.உதயசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் இந்த மாதம் (நவம்பர்) முழுவதும் ஆதார் சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
முகாமில் புதிய ஆதார் பதிவுக்கு இலவசம். 5 மற்றும் 15 வயதில் மேற்கொள்ளப்படும் கட்டாய திருத்தங்களான புகைப்படம், கைரேகை, கருவிழி பதிவு ஆகியவை கட்டணம் இல்லாமல் செய்யப்படும். மேலும் முகவரி திருத்தம், செல்போன் எண் மாற்றம், பிறந்த தேதி திருத்தம், பெயர் மாற்றம், போன்ற சேவைகளுக்கு ரூ.50 செலுத்த வேண்டும்.