

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே மருதுறை கிராமம் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து என்பவரின் மனைவிவள்ளியம்மாள் (74). இவருடைய 2மகள்கள் திருமணமாகி வெளியூர்களில்வசி்க்கின்றனர். கணவர் இறந்துவிட்டநிலையில்,வள்ளியம்மாள் மட்டும் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தின் மத்தியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். வள்ளியம்மாளுக்கு சொந்தமான நிலத்தில் சுப்ரமணியம்என்பவர் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில், மரவள்ளி கிழங்கு,மக்காச்சோள பயிர்களுக்கு தண்ணீர்பாய்ச்ச நேற்று முன்தினம் சுப்ரமணியம் சென்றுள்ளார். வள்ளியம்மாளின் வீடுதிறந்த நிலையில் இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ரத்தவெள்ளத்தில் அவர் உயிரிழந்து கிடந்தார்.பீரோ திறக்கப்பட்டு பணம், நகைகள்கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
சம்பவ இடத்துக்கு காங்கயம்போலீஸார் சென்று ஆய்வு நடத்தியதுடன், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் கொண்டும்சோதனை மேற்கொண்டனர். கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "வீட்டிலிருந்த நகைகள், வள்ளியம்மாள் அணிந்திருந்த நகைகள் என 12 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காவல் துணைக் கண்காணிப்பாளர் தனராஜ் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தோட்டத்துக்கு கடந்த சில நாட்கள் வரை வந்து சென்றவர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.