

புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தின் அவலநிலை மற்றும் அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கடந்த 10-ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக எம்எல்எல்ஏக்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், சரவணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ. மாவட்ட செயலாளர் ஆறுமுகம், விசிக மாவட்ட செயலாளர் பாலஅறவாழி உள்ளிட்ட 150 பேர் மீது புவனகிரி போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.