

பொதுமக்களிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யத் திட்டமிட்டிருந்த 4 ரவுடிகள் உட்பட ஐந்து பேரைப் போலீ ஸார் கைது செய்தனர்.
மதுரையில் தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபடுவதைத் தடுக்கப் பழைய குற்றவாளிகளைப் போலீஸார் தொடர்ந்து கண் காணிக்கின்றனர்.
இதன்படி மதிச்சியம் காவல் நிலைய எஸ்.ஐ. கருணாநிதி தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது ஓபுளா படித்துறை அருகே நேற்று முன்தினம் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேரைப் போலீஸார் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசா ரணையில், ஆழ்வார்புரத் தைச் சேர்ந்த மைதீன்கனி(23), அழகுபாண்டி(22), வைகை வட கரை கார்த்திக்(25), சூரியா(23), கண்ணன் எனத் தெரிய வந்தது. இவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வாங்கச் செல்லும் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்யத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந் தது. இவர்களில் கண்ணன் தவிர மற்ற 4 பேரும் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மதிச்சியம் போலீஸார் 5 பேரையும் கைது செய்தனர்.