

மதுரை மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி சட்டப்படி தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இரண்டாவது சுற்று குலுக்கல் நேற்று நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி சட்டப்படி 443 பள்ளிகளில் 5,752 இடங்களுக்கு அக்.1-ல் நடந்த குலுக்கலில் 159 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், 284 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 3,852 இடங்களில் குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றது.
மீதம் உள்ள 77 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், 244 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 1,900 இடங்களுக்கு குழந்தைகள் சேர்க்கை இரண்டாவது சுற்று குலுக்கல் நேற்று நடைபெற்றது.
இதில், மதுரை குட்லக் மெட்ரிக். பள்ளியில் 3 இடங்களுக்கு 31 குழந்தைகள் விண்ணப்பித்த நிலையில் குலுக்கல் நடை பெற் றது.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமி நாதன் தலைமை வகித்தார். நியமன அலுவலரான விர கனூர் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை தே.தெரசா சகாயமலர், மாவட்ட சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளர் அ.மகாலிங்கம், குட்லக் மெட்ரிக். பள்ளித் தாளாளர் ஜி.ராஜேஸ்வரி, பள்ளி முதல்வர் ஜி.நிவேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 3 குழந்தைகளும், காத்திருப்போர் பட்டியலில் 10 குழந்தைகளும் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சேர்க்கப் பட்டனர்.