

தேனி மாவட்டத்தில் போலீஸாரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் உளவியல் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்தார்.
கூடுதல் காவல் கண்காணிப் பாளர்கள் பிகே.ராஜேந்திரன், கேஎம்.சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் சி.ராமசுப்ரமணியன், மூத்த மனநல மருத்துவர் ஆ.கண்ணன், காவல் மனநிறைவுப் பயிற்சி உதவி முதன்மை அலுவலர் தீபன், உளவியலாளர் ராஜ்குமார் ஆகியோர் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.
மன அழுத்தம், மனச் சோர்வு, போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட உளவியல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரும் முறைகள் குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.