சைல்டு லைன் மூலம்இணைய வழி வகுப்புக்காக மாணவர்களுக்கு செல்போன்

சைல்டு லைன் மூலம்இணைய வழி வகுப்புக்காக  மாணவர்களுக்கு செல்போன்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் 10 மாதங்களில் சைல்டுலைன் மூலமாக 203 குழந்தைகள் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி சைல்டுலைன் மூலம் நிகழாண்டில், 664 தொலைபேசி அழைப்புகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை 203 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. கரோனா ஊரடங்கில் 93 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனைத் தவிர இணையவழி வகுப்புக்காக 60 குழந்தைகளுக்கு செல்போன்கள் வழங்கப்பட்டன. மேலும் 10 குழந்தைகள் செவிலியர் படிப்பிற்காக பரிந்துரை செய்யப்பட்டு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in