தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட்டம் ஜவுளி, மளிகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம் பூக்கள் விற்பனை உயர்வு: பட்டாசு வியாபாரம் மந்தம்

திருநெல்வேலி டவுன் வடக்கு ரதவீதியில் நேற்று பெய்த மழையால் தேங்கியிருந்த தண்ணீர். மழையால் பெரிய கடைகளில் மட்டுமின்றி சாலையோர வியாபாரமும் நேற்று  பாதிக்கப்பட்டது. (அடுத்த படம்) பாளையங்கோட்டையில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நேற்றுவரை விற்பனை குறைவாகவே இருந்தது. தீபாவளிக்கு முதல் நாளான இன்று விற்பனை இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்.
திருநெல்வேலி டவுன் வடக்கு ரதவீதியில் நேற்று பெய்த மழையால் தேங்கியிருந்த தண்ணீர். மழையால் பெரிய கடைகளில் மட்டுமின்றி சாலையோர வியாபாரமும் நேற்று பாதிக்கப்பட்டது. (அடுத்த படம்) பாளையங்கோட்டையில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நேற்றுவரை விற்பனை குறைவாகவே இருந்தது. தீபாவளிக்கு முதல் நாளான இன்று விற்பனை இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்.
Updated on
1 min read

ஜவுளி, மளிகைப் பொருட்கள், பூக்கள் உள்ளிட்ட தீபாவளி பொருட்கள் விற்பனை நேற்று களைகட்டியது. பாவூர்சத்திரம் சந்தையில் ரூ. 10 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையாகின. பட்டாசு விற்பனை இன்று சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் தீபாவளிக்கு முந்தைய சில நாட்களில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதும். நடப்பாண்டும், நேற்று முன் தினம் வரை கடைகளில் கூட்டம் நன்றாக இருந்தது. மாநகரில் நேற்று மதியம் 1 மணிக்கு பிறகு, நல்ல மழை பெய்தது. தொடர்ந்து இரவு வரை அவ்வப்போது மழை பெய்தது.

மழை காரணமாக, திருநெல் வேலி டவுன் வடக்கு ரதவீதி, திருநெல்வேலி சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதிகளில் ஜவுளி, பட்டாசு, பலகாரக் கடைகளில் கூட்டம் இல்லை. இதனால் வியாபாரிகளும், விற்பனையாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர். சாலையோரக் கடைகளில் பொருட்களை விற்பனை செய்வோர் மழையால் வியாபாரமின்றி பாதிக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், பாளையங் கோட்டையிலும், திரு நெல்வேலியிலும் ஆர்டர்களின் பேரில், தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடை பெற்றது. நேற்றும் இப்பணிகள் தொய்வின்றி நடைபெற்றது.

கன்னியாகுமரி

தோவாளை மலர்ச்சந்தை

தூத்துக்குடி

கோவில்பட்டி

பூக்கள் வரத்து குறைவால் விற்பனையும் சுமாராக இருந்தது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை, கனகாம்பரம் தலா ரூ. 1,000, சம்பங்கி 200, கேந்தி 100, பச்சை 50, அரளி 200, செவ்வந்தி 200, கலர் பிச்சி 800, சாதாரண ரோஜா .250, சிவப்பு ரோஜா 200, ஆப்பிள் ரோஜா 300 மற்றும் பன்னீர்ரோஜா ரூ.250க்கு விற்க்கப்பட்டது. கடந்த ஆண்டை விட பூக்கள் விலை கிலோவுக்கு ரூ.100 வரை குறைவாக விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ரூ.10 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளியையொட்டி தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், கடையம், ஆழ்வார்குறிச்சி, பாவூர்சத்திரம், வாசுதேவநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஜவுளிக் கடைகள், ஸ்வீட் கடைகள், பட்டாசு கடைகளில் நேற்று வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

பாவூர்சத்திரத்தில் வியாழக்கிழமைதோறும் ஆட்டுச் சந்தை நடைபெறும். தீபாவளியையொட்டி நேற்று இச்சந்தையில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாயின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in