எனது மகன் நாட்டை வளர்ச்சிக்கு இட்டுச் செல்வார்: மோடியின் தாயார் நெகிழ்ச்சி

எனது மகன் நாட்டை வளர்ச்சிக்கு இட்டுச் செல்வார்: மோடியின் தாயார் நெகிழ்ச்சி
Updated on
1 min read

தனிப் பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி பிரதமர் ஆகவுள்ள நிலையில், அவரது தாயார் ஹிராபென் தனது மகனின் வெற்றி நாட்டை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்லும் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

காந்திநகரில் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி தனது தாயாரை சற்று முன் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

மோடியின் தாயார் தனது மகனின் வெற்றி பற்றிக் கூறுகையில் “மோடிக்கு எப்போதும் எனது ஆசிகள் உண்டு, நிச்சயம் அவர் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வார்” என்று கூறியுள்ளார்.

காந்திநகர் தொகுதியில் வாக்களிக்க மோடியின் தாயார் ஆட்டோ ரிக்‌ஷாவில் சென்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in