உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் தி.மலை மாவட்டங்களில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம்

தி.மலை அடுத்த சோமாசிபாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
தி.மலை அடுத்த சோமாசிபாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
Updated on
1 min read

பவர் கிரீட் நிறுவனம் மூலம் உயர் மின்அழுத்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு, சந்தை மதிப்பில் 10 மடங்கு இழப்பீடு வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 இடங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் மற்றும் துரிஞ்சாபுரம் ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்துக்கு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சிவக்குமார், ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, “உயர் மின்அழுத்த மின் கம்பிகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். செல்போன் டவர்களுக்கு வழங்குவதுபோல் உயர் மின்அழுத்த டவர்களுக்கும் மாத வாடகை வழங்க வேண்டும். உயர் மின்அழுத்த மின்கம்பிகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதேபோல், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன கால்நடை மருத்துமனை அமைக்க வேண்டும்.

பாதிக்கப்படும் வேளாண் பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் உயர் மின்அழுத்த கம்பிகளை புதைவடம் வழியாக கொண்டு செல்ல வேண்டும்” என முழக்கமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in