

தூத்துக்குடியில் நேற்று செய்தி யாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமியிடம், ‘‘நீங்கள் போலி விவசாயி என்று ஸ்டாலின் கூறு கிறாரே’’ என கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்து முதல்வர் கூறியதாவது:
விவசாயம் பற்றியே தெரி யாதவர் திமுக தலைவர் ஸ்டா லின். விவசாயத்தை பற்றியே தெரியாத அவர், போலி விவ சாயி, உண்மையான விவசாயி என்பதை எப்படி கண்டுபிடிப்பார், தூத்துக்குடிக்கு வந்தபோது பதநீரை குடித்துவிட்டு, இதில் சர்க்கரை கலந்துள்ளதா என கேட்டவர் அவர். ஒவ்வொரு வருக்கும் ஒரு தொழில் இருக் கிறது. ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கிறது, தொழிலே செய்யாமல் பிழைப்பு நடத்துகிற ஒரே நபர் ஸ்டாலின்தான்.
அரசியலில் இருந்தாலும், எனக்கு முதன்மையான தொழில் விவசாயம். சிறு வயது முதலே விவசாயம் மேற்கொண்டவன். கடினமாக உழைத்தவன். எனது உழைப்பைப் பற்றி அவர் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
நீர் மேலாண்மைத் திட்டத்தில் இன்று தமிழகம் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. வேளாண் துறையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வ ராக இருப்பதால்தான் இது சாத் தியமானது. குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் போன் றவை அதிமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு முதல்வர் கூறினார்.