

இதில், மருத்துவர்கள் சதீஷ்ராஜ், சுதா, சீனிவாசன், அகல்யா ஆகியோர்பங்கேற்றனர். முகாமில் மாற்றுத் திறனாளிகள் வழங்கிய பல்வேறு கோரிக்கை மனுக்களில், தேசிய அடையாள அட்டைக்கான கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, மாற்றுத்திறன் பாதிப்பை மதிப்பீடு செய்து, சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகள் 181 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இச்சிறப்பு முகாமில் மொத்தம் 345 மாற்றுத் திறனாளிகள் பயனடைந்தனர். நிகழ்ச்சியில், திருப்போரூர் வட்டாட்சியர் ரஞ்சனி, தனி வட்டாட்சியர் கவிதா, பேச்சுப் பயிற்சியாளர் பிரபாகரன், செயல் திறன் உதவியாளர் ஜெயசித்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.