விழுப்புரம் டிஐஜி அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிப்பு

விழுப்புரம் டிஐஜி அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிப்பு
Updated on
1 min read

விழுப்புரம் சரக டிஐஜி அலுவ லகத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் நேற்று காலை பையில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். தனக்கு மர்மநபர்கள் பில்லி, சூனி யம் வைத்துள்ளனர். தன்னை கொல்ல பார்க்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயைஅணைத்தனர். பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர்,சிதம்பரம் அருகே மேலமணக்குடி பகுதியைச் சேர்ந்த திருலோகசந்தர் (35) என்பதும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in