நெல்லை மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா

நெல்லை மாவட்டத்தில்  18 பேருக்கு கரோனா
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகராட்சி- 12, பாளையங்கோட்டை, வள்ளியூர்- தலா 2, பாப்பாக்குடி, களக்காடு- தலா 1. அம்பாசமுத்திரம், மானூர், நாங்குநேரி, ராதாபுரம், சேரன்மகாதேவி வட்டாரங்களில் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,389 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று 37 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 14,922 பேர் குணமடைந்துள்ளனர். 334 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 13 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 7,915 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 7,681 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 79 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கன்னியாகுமரியில் நேற்று 38 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in