

இதையடுத்து மருத்துவ கல்வியில் சேர காஞ்சி, செங்கை மாவட்டங்களின் அரசுப் பள்ளிகளில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 47 பேர் தேர்வாகினர். இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் வாழ்வில் முன்னேற மருத்துவ இடஒதுக்கீட்டில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு செங்கல்பட்டு மாவட்ட அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தமிழக முதல்வருக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அனைத்து பள்ளிகளிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.