

விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி பாரதி நகரைச் சேர்ந்தவர் பால முருகன்(53). ராமநாதபுரத்தில் வேளாண் அதிகாரியாகப் பணிபுரிகிறார். இவர், தனது மனைவி, மகனுடன் கடந்த 6-ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டு நேற்று அதிகாலை வீடு திரும்பினார். அப்போது இரும்பு கேட் மற்றும் கதவுகள் இரும்புக் கம்பியால் நெம்பி உடைக்கப் பட்டிருந்தன. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
பாண்டியன் நகர் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.