

தேசிய அளவிலான பூப்பந்துப் போட்டியில் முதல், இரண்டாம் இடம் பெற்ற மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 8 பேர் ரூ.14 லட்சமும், கோகோ போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற 3 மாணவிகள் ரூ.3 லட்சம் என தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ.17 லட்சம் பெற்றுள்ளனர்.
இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பூப்பந்துப் போட்டி யில் வெற்றிபெற்ற ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் டி.காருண்யா, இ.ஆர்.எமிமாள் ஆகியோர் தலா ரூ.2 லட்சமும், 17 வயது பெண்கள் பிரிவில் எம்.ஆர்த்தி, ஏ.மீனாட்சி ஆகியோர் தலா ரூ.2 லட்சமும், 19 வயது பெண்கள் பிரிவில் ஜெ.ஜெனிபர், எம்.ஜோதிலெட்சமி, எம்.ஜனனி, எம்.அக்ஷயா ஆகிய 4 பேர் தலா ரூ.1.5 லட்சமும் பெற்றனர்.
மேலும் கோகோ போட்டியில் 19 வயது பெண்கள் பிரிவில் வெற்றிபெற்ற எஸ்.தனலெட்சுமி, ஜெ.ராகேல், வி.ஆர்.சுவாதி ஆகிய 3 பேரும் தலா ரூ.1 லட்சமும் பெற்றுள்ளனர்.
இந்த மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேஷ்கண்ணன் ஆகியோரை மதுரை ராமநாதபுரம் திருமண்டிலப் பேராயர் எம்.ஜோசப், பேராயரம்மா பி.லீலா மனோகரி, பள்ளித் தாளாளர் எ.டேவிட் ஜெபராஜ், தலைமை ஆசிரியர் என்.மேரி ஆகியோர் பாராட்டினர்.