

திடக்கழிவு மேலாண் மைத் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் பயன்படுத்துவதற்காக ரூ.42.28 லட்சம் மதிப்பிலான மின்கலன் மூலம் இயங்கும் குப்பை அள்ளும் வாகனங்கள் வழங்கும் விழா ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ. சரோஜா தலைமை வகித்தார்.
முத்துக்காளிப்பட்டி, வடுகம், முனியப்பம் பாளையம், குருக்குபுரம், கூனவேலம்பட்டி, கோனேரிப் பட்டி, காக்காவேரி, சந்திர சேகரபுரம், கவுண்டம்பாளையம், சிங்களாந்தபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு ரூ.42.28 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் 17 குப்பை அள்ளும் வாகனங்களை அமைச்சர் சரோஜா வழங்கினார்.
மேலும், 38 முதி யோருக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஜெகன்நாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, அருணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.